முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜஸ்டின் விஜய் நடிக்கும் ஸ்ட்ரைக்கர்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      சினிமா
Justin-Vijay 2023 01 30

Source: provided

ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்ட்ரைக்கர். ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய படத்தின் நாயகன் ஜஸ்டின் விஜய், என்னுடைய பயணத்தை ஒரு விஜேவாக ஆரம்பித்தேன். ‘காஞ்சனா’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். எனது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர்தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக எடுத்துள்ளோம் என்றார். படத்தின் தயாரிப்பாளர் ஹென்றி டேவிட் பேசும்போது, “இது எனக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை கேட்டதுமே பிடித்தது. நிச்சயமாக அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இது உருவாகியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து