முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம்-சென்னைக்கு விரைவில் விமான சேவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      இந்தியா
Flight 20221 02 02

Source: provided

புதுடெல்லி: ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி எழுப்பிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2016ல் தொடங்கப்பட்ட 'உதான்' திட்டத்தின் கீழ் தேவைக்கு ஏற்ப நகரங்களை இணைக்க கூடிய வகையில் விமான சேவை நடந்து வருகிறது. உதான் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் உள்ள கடலோர காவல் படை விமானத் தளத்தில் இருந்து விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து சென்னையை இணைக்க கூடிய வகையில் விமானத்தை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாராகி 2 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு விமான நிறுவனம், விமானத்தை இயக்க மத்திய அரசு அனுமதி தரும் என தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் இருப்பதால் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து