முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு : ராணுவ வட்டாரங்கள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
Army 2023 02 05

Source: provided

புதுடெல்லி : அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனி மேல் முதலில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் உடல் தகுதித்தேர்வு, பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. 

இந்த இரண்டையும் முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறைக்கு பதிலாக, இனி மேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. 

இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:- 

அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். 

இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பின்னர் உடல் தகுதித்தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும். மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். 

மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தைக் குறைத்து, எளிதாக கையாள கூடியதாகவும் மாற்றும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 weeks 20 hours ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 20 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 3 weeks ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 3 weeks ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 3 weeks ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து