முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு : தலைமை நீதிபதி பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
supreme-courti 20221 01 04

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அவர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். 

சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் நடைமுறை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, இது முக்கியமான விவகாரம். இதில் சங்கடமான நிலையை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி விடாதீர்கள் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி, கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களுக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறினார். 

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது டுவிட்டரில், 

ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, அலாகாபாத் ஐகோர்ட் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் என்று பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில்  இவர்கள் 5 பேருக்கும் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.  இதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து