முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டங்கள் பிரிட்டனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : முன்னாள் பிரதமர் லிஸி ட்ரஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      உலகம்
Lizzy-Dress 2023 02 06

Source: provided

லண்டன் : பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸி ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில், பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், வெளியுறவு அமைச்சர் லிஸி ட்ரஸுக்கும், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸி ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸி ட்ரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில் பதவியேற்று 47 நாட்களிலேயே தனது பிரதமர் பதவியை லிஸி ட்ரஸ் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தனது ராஜினாமாவுக்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் லிஸி ட்ரஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கார்ப்பரேஷன் வரியை 19 முதல் 25 சதவீதமாக உயர்த்தும் ரிஷி சுனக்கின் முடிவு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று லிஸி ட்ரஸ் விமர்சித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து