முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டின் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு : தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      இந்தியா
New-Judge 2023 02 06

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக 5 ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, கடந்த 3-ம் தேதி கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 5 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி, சுப்ரீம் கோர்ட்கொலீஜியம், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட் நீதிபதி அசானுதின் அமானுல்லா, அகலகாபாத் ஐகோர்ட் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதனை, நீதிபதிகள் கவுல் மற்றும் ஏ.எஸ் ஒகா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். 

இந்தநிலையில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி உட்பட சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். முன்னதாக 27 நீதிபதிகளே இருந்தனர். தற்போது ஐந்து பேர் புதிய நீதிபதிகளாக பதவி ஏற்றிருக்கும் நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து