முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 2 கி.மீ. தொலைவு ரயில் தண்டவாளம் திருட்டு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      இந்தியா
Railway 2023 02 06

Source: provided

பாட்னா : பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் பெயர்த்து, திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. 

பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. தொலைவுக்கு சரக்குகளை ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த தண்டவாள பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து உள்ளது. 

இந்நிலையில், 2 கி.மீ. தொலைவு தண்டவாள பகுதியை யாரோ மர்ம நபர்கள் பல்வேறு கால கட்டங்களில் திருடி சென்று விட்டனர். இதுபற்றி அறிந்ததும் சமஸ்திப்பூர் ரயில்வே வாரியம், தனது 2 ஊழியர்களை சஸ்பெண்டு செய்துள்ளது. 

குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு துறை சார்ந்த விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி வழக்குப் பதிவும் செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து