முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.சி.பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
EPS OPS 2023 02 06

Source: provided

சென்னை : கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ல் சென்னை ஐகோர்ட்டில் அவர்  வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துத்திற்குள் தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், 

கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதாகவும், அதன்படி கடந்த 2020 மார்ச் முதல் 2021 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால், 2021 அக்டோபருக்கு பின் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதனால் குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி. ஆஷா ஆகியோரடங்கிய அமர்வு, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து