முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஐ.பி.எல். தொடர்: இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      விளையாட்டு
Women s-cricket 2023 02 07

Source: provided

மும்பை : ஏலத்தில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தநிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மகளிருக்கான போட்டி...

ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரீமியர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

மும்பையில் ஏலம்...

பெண்கள் பிரிமீயர் லீக் மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை மும்பையில் தொடங்குகிறது. வருகிற 13ம் தேதி வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்கள் முதல் 18 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கலாம். அணியில் மொத்தம் 5 வெளிநாட்டு வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கலாம், அந்த 5 பேரில் 1 அசோசியேட் வீராங்கனையை தேர்வு செய்யலாம். மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும்.

இறுதிபோட்டிக்கு... 

புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2 மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் தங்களுக்குள் மோதி அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தநிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வான 246 இந்திய வீராங்கனைகளும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் வருகின்ற 13 ஆம் தேதி மும்பையில் நடக்கும் ஏலத்தில் பங்கு பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச தொகைக்கு... 

இந்திய மகளிர் அணியினர் அதிகபட்ச தொகைக்கு தேர்வாகி உள்ளனர். இதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி சர்மா, ஷெபாலி வர்மா உள்ளிட்ட முக்கியமான 24 வீராங்கனைகள் அதிகபட்சமான விலை ரூ.50 லட்சத்திற்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 அணிகள் விவரம்

1. அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் - ரூ. 1,289 கோடி - அகமதாபாத்.

2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 912.99 கோடி - மும்பை.

3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 901 கோடி - பெங்களூரு.

4. ஜே.எஸ்.டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 810 கோடி - டெல்லி.

5. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 757 கோடி - லக்னோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து