முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      சினிமா
Vidutalai 2023 03 12

Source: provided

விடுதலை படத்தின் முதல் பாகத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குனர் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் இக்கதையின் தொடக்கமே இளையராஜாதான். இளையராஜாவின் மியூசிக்கல் மைன்ட் பக்கத்தில் இருந்து பார்த்தது எனக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்தது. என்றார். பின்னர் பேசிய இளையராஜா, இப்படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத களத்தில் இருக்கும். திரையுலகத்திற்கு வெற்றிமாறன் முக்கியமான இயக்குனர். 1500 படம்‌ பணியாற்றிய பிறகு இதனை சொல்கிறேன் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து