முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சல் எங்களுடையதே: சீனாவுக்கு இந்தியா கண்டனம்

புதன்கிழமை, 14 மே 2025      இந்தியா
Jaishankar 2023 06 08

Source: provided

புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று கண்டனத்தைக் காட்டமாக பதிவு செய்துள்ளது இந்தியா.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சாலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது. இதில் சீனாவின் முயற்சிகள் எல்லாமே வீணானவை, அபத்தமானவை. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை மாற்ற சீனா முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் அன்றும், இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவிலிருந்து பிரிக்கவே முடியாத பகுதி என்பதையும் மாற்றிவிட முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமை கொண்டாடும் சீனா: அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை ஜங்னன் எனக் குறிப்பிடுகிறது. அந்தவகையில் ஏற்கனவே, இதுபோன்று அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றி இருக்கிறது. 2017ல் 6 இடங்களின் பெயர்களையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது.

அதேபோல் 11 இடங்களின் பெயர்களை கடந்த ஏப்ரல் 2023-ல் சீன உள்துறை அமைச்சகம் மாற்றியது. அதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியது. 5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் ஆகிய 11 இடங்களின் பெயர்களை சீனா பெயர் மாற்றியது.

இந்த 11 பகுதிகளும் நமது நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ், நமது நிர்வாகத்தின் கீழ் இருப்பவை. இருந்தும் அவற்றை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றுவதுபோல் சீனா பெயர் மாற்றம் செய்தது. இப்போது மீண்டும் பெயர் மாற்ற முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து