முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

புதன்கிழமை, 14 மே 2025      தமிழகம்
CM-1 2023 05 13

Source: provided

ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நேற்று காலை அவர் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும் என கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே உறுதியளித்தேன். யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர் எனக் கூறியிருந்தேன். சட்டப்பேரவையில் பேசும்போது ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ எனப் பேசினேன். தற்போது, அந்த வழக்கில் தீர்வு வழங்கப்பட்டது. இதேபோல கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தான்தான் பொள்ளச்சி வழக்கில் நீதி கிடைத்ததற்குக் காரணம் எனப் பேசிவருகிறார்.

அவர் அமித்ஷாவை பார்த்தார். எதற்குப் பார்த்தார் என ஊருக்கே தெரியும். இந்நிலையில், 100 நாள் வேலை திட்டம், மெட்ரோ திட்ட ஆகியவற்றுக்கு நான் தான் அமித்ஷாவிடம் கூறினேன் என சொல்லி வருகிறார். இதெல்லாம் ‘ஹம்பக்’. பொய் மற்றும் பித்தலாட்டம் செய்வது தான் பழனிசாமியின் வேலையாக இருக்கிறது. 

ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கம் சிறப்பு வாய்ந்தது. இங்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரர்கள் வந்து பயிற்சி பெறுகின்றனர். தமிழ்நாடு முழுவதுமே இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவகிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்றே தெரியாது?. ஆனால் தற்போது யார் விளையாட்டுத் துறை அமைச்சர் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்.” என்று கூறினார்.

இதற்கிடையில், குன்னூர் எடப்பள்ளி அருகே உள்ள சாய்பாபா கோயிலில் வழிபாடு செய்ய துர்கா ஸ்டாலின் மற்றும் திரைப்பட நடிகை சரண்யா மற்றும் அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர். இவர்கள் சாய்பாபாவின் முன்புறம் உள்ள சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து மலர் தூவி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அங்குள்ள விநாயகர், முருகன், அம்மன் உள்பட்ட கோவில்களை சுற்றி வலம் வந்தார். சாய்பாபா தர்மஸ்தலா சுவாமினி சக்திமா சாய்பாபா சிலைகள் வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து