முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்மிக குருவுடன் கோலி சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      விளையாட்டு
Veert-Coli-Dhoni 2025-03-24

Source: provided

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். அண்மையில் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில், பிரபல ஆன்மிக குருவான பிரேமானாந்த் சஹாரன் ஜி மகாராஜிடம் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் நேற்று ஆசி பெற்றுள்ளனர். 

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி பிரேமானாந்த் சஹாரன் ஜி மகாராஜிடம் ஆசி பெறும் விடியோவினை அவரது சீடர்கள் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த விடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும் ஆன்மிக குருவான பிரேமானாந்த் சஹாரன் ஜியை விராட் கோலி அவரது குடும்பத்துடன் சந்தித்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________________________________________

பாக். அணிக்கு புதிய பயிற்சியாளர்

பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான புதிய தலைமைப் பயிற்சியாளரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (மே 13) நியமித்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியின் பயிற்சியாளர்களை தொடர்ச்சியாக மாற்றி வருகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (ஒருநாள், டி20) புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற மே 26 ஆம் தேதியுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நிறைவடையும் நிலையில், அந்த தொடர் நிறைவடைந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு 7 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மைக் ஹெஸ்ஸன் அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் நடப்பு சாம்பியனான இஸ்லமாபாத் யுனைட்டட் அணியின் பயிற்சியாளராக மைக் ஹெஸ்ஸன் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணியின் ஐந்தாவது வெளிநாட்டு தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்பாக, கிராண்ட் பிராட்பர்ன், மிக்கி ஆர்தர், சைமன் ஹெல்மட், கேரி கிரிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து