Idhayam Matrimony

வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய முதல்வர் பிரார்த்தனை

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2023      ஆன்மிகம்
Velankanni 2023 03 14

 உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா குடும்பத்தினரோடு பிரார்த்தனை செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா நேற்று புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், பின்னர் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகை தந்து அங்கிருந்து சாலை வழியாக காரில் வேளாங்கண்ணிக்கு சென்றார். 

அவருக்கு பேராலய அதிபர் இருதயரஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேராலயத்தில்  மனைவி மெஹ்தாப், தாய், சகோதரர்  மற்றும் குடும்பத்தினருடன் மேகாலய மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா மாதாவை தரிசனம் செய்தார். 

பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தைகள் அவருக்கு புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்தனர். தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேகாலய மாநில முதல்வரின் வருகையை அடுத்து நாகை மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து