Idhayam Matrimony

3 மாதங்களில் முழு குர்ஆனையும் கைகளால் எழுதி காயல்பட்டினம் இளம்பெண் சாதனை

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2024      ஆன்மிகம்
Tuticorin 2024 07 23

Source: provided

தூத்துக்குடி : முஸ்லிம் மதத்தினரின் இறைவேத திருக்குர்ஆன் முழுவதையும், காயல்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் தன் கைகளாலேயே எழுதி சாதனை படைத்துள்ளார். 

காயல்பட்டினம் நெய்னார் தெருவைச்சேர்ந்த கே.எஸ்.முஹம்மத் அபூபக்கர் (தொடர்பு எண்: +91 97912 21161), எம்.எஸ்.பீவி பாத்திமா தம்பதியின் மகளுமான இவர் பி.எஸ்.சி. பட்டதாரியும், மார்க்கம் கற்ற ஆலிமாவும் ஆவார். தான் பயின்ற முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப்பிரிவில் பகுதிநேர ஆசிரியராக சேவையாற்றி வரும் இவர், திருமறை குர்ஆன் முழுவதையும் மூன்றே மாதங்களில் தனது கைகளால் அழகுற எழுதி, ஆறு பாகங்களாக பிரித்து பைண்டிங் செய்து, நூல் வடிவில் காட்சிப்படுத்தியுள்ளார்.

இவரது இந்தச் சாதனையை முன்னிட்டு,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நகரத் தலைவர் எம்.எஸ்.நூஹ்சாஹிப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஐ.காதர் அனைவரையும் வரவேற்றார். திருமறை குர்ஆனை கைகளால் எழுதி சாதனை புரிந்த கே.எம்.ஏ.கதீஜா ஷரீபாவை பாராட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அப்பரிசை சாதனை பெண்ணின் தந்தை கே.எஸ்.முஹம்மத் அபூபக்கரிடம் வழங்க, நகர தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.

நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கவுரவ ஆலோசகர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான எம்.ஏ.முஹம்மத் ஹஸன், முஜீப், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து