முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 ஆண்டுகள் கடந்தும் முறியடிக்கப்படாத சச்சினின் சாதனை

வியாழக்கிழமை, 16 மார்ச் 2023      விளையாட்டு
16-Ram-55

Source: provided

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் நூறாவது சதம் அடித்து 11 ஆண்டுகள் ஆகியும் இன்னும் டெண்டுல்கரின் சாதனை தகர்க்கப்படவில்லை.

மறக்க முடியுமா..?

கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத பல தருணங்கள் அவர்களது மனதோடு நிறைந்திருக்கும். அதில் ஒன்றுதான் இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பதிவு செய்த நூறாவது சதம். இதோ அந்த மைல்கல் சாதனை படைக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அந்த சாதனை அப்படியே தகர்க்கப்படாமல் உள்ளது.

100-வது சதம்...

‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த அந்த நூறாவது சதம் நேற்று (மார்ச் 16-ம் தேதி 2012-ல் ) பதிவு செய்யப்பட்டது.

114 ரன்கள்... 

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. மிர்பூரில் இந்தப் போட்டி நடைபெற்றது. சச்சின், 147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து அவுட்டானார். 12 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் இதில் அடங்கும். மொத்தம் 205 நிமிடங்கள் களத்தில் பேட் செய்திருந்தார். 138 பந்துகளை எதிர்கொண்டு சதம் கடந்தார். அதன் மூலம் பூமியில் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை பதிவு செய்த வீரர் ஆனார். இருந்தும் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

கடினமான காலம்...

“இது எனக்கு மிகவும் கடினமான காலம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பதிவு செய்த 99 சதங்கள் குறித்து யாரும் பேசவே இல்லை. ஆனால், இந்த நூறாவது சதம் குறித்த பேச்சு அதிகம் இருந்தது. ஊடகம் துவங்கி நான் செல்லும் இடமெல்லாம் இந்த பேச்சுதான். அணிக்காக ரன் சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது பணி. உலகக் கோப்பை வெல்ல வேண்டுமென்ற எனது கனவு 22 ஆண்டுகளுக்கு பிறகுதான் நிறைவேறியது” என சச்சின் அப்போது தெரிவித்திருந்தார்.

24 ஆண்டுகளில்... 

1989 முதல் 2013 வரையிலான 24 ஆண்டுகளில் 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடினார். அதில் 34,357 ரன்கள், 100 சதங்கள் மற்றும் 201 விக்கெட்டுகளையும் சச்சின் கைப்பற்றி உள்ளார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து