Idhayam Matrimony

உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      சினிமா
Rajini 2023 03 18

Source: provided

மும்பை : உத்தவ் தாக்கரேவை நேற்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து பார்த்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினி மகராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை மும்பை, மாட்டோஸ்ரீ இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இருவரின் திடீர் சந்திப்பிற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து