முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஒரே நாளில் 1,071 பேருக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      இந்தியா
India Corona 2022 12-06

Source: provided

புது டெல்லி : இந்தியாவில் இம்மாத தொடக்கத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 200-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. 

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பு 2 நாட்களுக்கு முன்பு 700-ஐ தாண்டி இருந்தது. பாதிப்பு கடந்த 16-ம் தேதி 754, 17-ம் தேதி 796 ஆக இருந்த நிலையில் நேற்று முன்தினம் 843 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,071 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து