முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ல் நடந்த தேர்தலை ரத்து செய்தது குவைத் நீதிமன்றம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      உலகம்
Kuwait 2023 03 20

Source: provided

துபாய் : குவைத் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மன்னராட்சி நடக்கும் நாடுகள் இருந்தாலும், குவைத் நாட்டில் பிரதமர், அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றம் செயல்பட்டு வருகிறது.  நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கு பாராளுமன்றத்தில் ஆலோசிக்கப்பட்ட பிறகே ஒப்புதல் அளிக்கப்படுகின்றன.

ஆனால், அரச குடும்பத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தொடரும் மோதல் காரணமாக நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதனை நிரூபிக்கும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை கலைத்து விட்டு, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில். 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் செயல்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து