முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுடன் ஆபாச வீடியோ: கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Benedict-Anto 2023 03 20

Source: provided

நாகர்கோவில் : பெண்களுடன் ஆபாச வீடியோ பேசியதாக தேடப்பட்ட கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். 

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் மதபோதகராக (பாதிரியார்) பணியாற்றினார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின. தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனிடையே, கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வரும் பெண்களுடன் வீடியோவில் ஆபாச செயலில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆன்டோ மீது இளம்பெண் புகார் அளித்தார். புகாரையடுத்து பாதிரியார் ஆன்டோ தலைமறைவானார். 

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோவை போலீசார் நேற்று கைது செய்தனர். நாகர்கோவிலில் பண்ணைவீட்டில் தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து