முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் 3 நாள் வெளியீடு : பக்தர்கள் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2023      ஆன்மிகம்
thirupathi

Source: provided

திருப்பதி : 3 நாட்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சேவைகள் மற்றும் தரிசனங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் தினமும் 1000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதிபாலங்கரா சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அங்கப்பிரதட்சணம் டிக்கெட்டுகள் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதனை பக்தர்கள் பயன்படுத்தி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து