முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் ஆயுத உதவி: அமெரிக்கா

புதன்கிழமை, 22 மார்ச் 2023      உலகம்
Anthony-Blinken 2023 03 22

Source: provided

வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.  இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், 

அதிபர் ஜோபைடன் ஒப்புதல் அளித்ததன்பேரில் உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர்க்கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளது. உக்ரைனின் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அதற்கு ஆதரவளிக்க 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து வந்துள்ளதற்காக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. எவ்வளவு காலமானாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நாங்கள் துணைநிற்போம் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து