எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஏப். 1-ல் நடைபெறவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தினை கேரள மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள பிரசித்தி பெற்ற மகாதேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இக்கொடுமைகளுக்கு எதிராக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் நாள் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் திருவாளர்கள் டி.கெ. மாதவன், கே. கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே. பி. கேசவ மேனோன் போன்றோர் முன்னின்று செயல்பட்டனர்.
மகாத்மா காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதன் காரணமாக, தந்தைப் பெரியார் வைக்கம் வீரர் என அறியப்பட்டதும், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23-ம் நாள் வெற்றிகரமாக முடிவுற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் திங்கள் ஒன்றாம் நாள் (01.04.2023) முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால், கேரள, தமிழ்நாடு மாநில முதல்வர்கள் இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்திட வேண்டுமென கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் எழுதியுள்ள கடிதத்தினை கேரள மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திட கேட்டுக்கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலினும் இவ்விழாவில் கலந்து கொள்ள தனது இசைவினைத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


