முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
Gold-2023-03-23

Source: provided

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 23) சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.44,320-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, நேற்று முன்தினம் குறைந்திருந்தது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.5,540-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.44,320-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,568 க்கு விற்பனையானது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.75,400-ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து