முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச அளவில் 120 கோல்கள்: கால்பந்து விளையாட்டில் புதிய படைத்த சாதனை ரொனால்டோ

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      விளையாட்டு
Ronaldo 2023 03 24

Source: provided

லிஸ்பன் : கால்பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரொனால்டோ அறியப்படுகிறார்.

குவைத் வீரர்... 

இந்நிலையில், சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 197 சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். நடப்பு யூரோ கோப்பை தகுதி சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக ரொனால்டோ களம் கண்டார். அது அவரது 197-வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 2 கோல்களை அவர் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். வியாழக்கிழமை அன்று இந்த சாதனையை ரொனால்டோ படைத்திருந்தார். கடந்த 2003 முதல் அவர் சர்வதேச போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார்.

120 கோல்கள்....

சர்வதேச போட்டிகளில் மொத்தம் 120 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக கோல்கள் பதிவு செய்தி வீரர்களின் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது அணியில் அவருக்கான இடம் சந்தேகமானதாக இருந்தது. இந்த சூழலில் யூரோ தொடரில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து