முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டிகோ விமானத்தில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் தம்பதியருக்கு பாராட்டு

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Oscar-Award 2023 03 25

Source: provided

கோவை : ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களாக அறியப்படும் பொம்மன், பெள்ளி தம்பதியர் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர். அந்தப் பயணத்தின்போது காட்டின் பேர் உயிர் என அறியப்படும் யானையை பாதுகாத்து வளர்க்கும் அவர்களது பணிக்காக விமான கேப்டன் மற்றும் குழுவினர், சக பயணிகள் என அனைவரும் அவர்களைப் பாராட்டி உள்ளனர்.

அந்த வீடியோவை தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் பகிர்ந்துள்ளார். அது பரவலாக கவனம் பெற்று வருகிறது. அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதியரை அழைத்து நிதி உதவி வழங்கி பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு மற்றும் அம்மு என இரண்டு யானை குட்டிகளை பேணிக் காத்தனர் பொம்மன், பெள்ளி தம்பதியர். தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திலும் அதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது தர்மன் என்ற பெயரில் தாயை இழந்த குட்டி யானையை இவர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்த தம்பதியரின் வாழ்க்கை கதை பலருக்கு உத்வேகம் கொடுத்துள்ளது. அதோடு இந்தியாவில் யானைகள் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் பலரையும் ஈர்த்துள்ளது. வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த ஆவணப்படம் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து