முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை: அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      இந்தியா
amit-shah 2022-12-01

Source: provided

பெங்களூரு : அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவகம் ஒன்றை திறந்து வைத்தும், 103 அடி உயர தேசிய கொடி ஒன்றையும் ஏற்றி வைத்தார். அதன்பின்னர், பிதார் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

கொரோட்டா கிராமத்தில் 2.5 அடி உயர மூவர்ண கொடியை ஏற்றியதற்காக, நிஜாம் படையினர் 100-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.  இன்றைய தினம் நான் பெருமையுடன் கூறி கொள்கிறேன். அதே நிலத்தில், நாம் தற்போது 103 அடி உயர மூவர்ண கொடியை ஏற்றி உள்ளோம். அதனை ஒருவராலும் மறைக்க முடியாது.

அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசியல் சாசனத்தில் எந்தவித பிரிவுகளும் இல்லை. பிரித்து ஆளும் அரசியலுக்காக, ஓட்டு வங்கி அரசியலுக்காக பேராசைப்பட்டு, காங்கிரஸ் அரசு, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களை ஒருபோதும் நினைவுகூர்ந்ததில்லை. 

அக்கட்சி பிரிவினையை உண்டாக்கும் அரசியலை மையப்படுத்தி, சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது. அந்த இடஒதுக்கீட்டை பா.ஜ.க. ஒழித்துள்ளது. ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லையென்றால் ஐதராபாத் சுதந்திரம் பெற்று இருக்காது. பிதார் நகரமும் கூட சுதந்திரம் அடைந்திருக்காது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து