முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி : 2ஆவது தங்கம் வென்றது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      விளையாட்டு
Savidhi-Pura 2023 03 26

Source: provided

புதுடெல்லி : உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நிது கங்காசையடுத்து இந்திய வீராங்கனை சவீதி புரா தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். உலக குத்துச் சண்டை போட்டியில் இந்திய நேற்று 2ஆவது தங்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டித் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சாய்கானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் நிது கங்காஸ். அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 22 வயதாகும் நிது கங்காஸ் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை முதல் செட்டில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இரண்டாவது செட்டில் ஓரளவு தாக்குப் பிடித்த மங்கோலிய வீராங்கனை 3-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ள நிலையில், அடுத்ததாக 81 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சவீதி பூரா தற்போது தங்கம் வென்றுள்ளார். அவர் சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலககுத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு நேற்று 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நிது கங்காசுடன் சேர்த்து இந்திய வீராங்கனைகள் மொத்தம் 11 முறை மகளிர் குத்துச் சண்டை பிவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். 2002, 2005, 2008, 2010, 2018 ஆகிய ஆண்டுகளில் 5 முறை மேரி கோமும், 2006-இல் சரிதா தேவி, 2006 மற்றொரு உலக சாம்பியன் தொடரில் ஜென்னி ஆர்.எல்., லேகா கே.சி, 2022 இல் நிகாத் ஸரீன் ஆகியோர் குத்துச் சண்டையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து