முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 23-ல் துவக்கம் : மே. 02-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      ஆன்மிகம்
Meenashi 2023 03 28

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே மாதம் 2-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவிலில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் நடைபெறும்.  சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால், ஒவ்வொரு திருவிளையாடலும் வெகு சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும்  மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே நினைவிற்கு வருவது சித்திரை திருவிழா தான். இது சைவ - வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விழாவாகவும் விளங்குவதால் சிவனடியார்கள் மட்டுமல்ல திருமால் பக்தர்களும் கொண்டாடும் பெருவிழா ஆகும். 

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

16 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு பிறகு மே 01-ம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 02-ம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. 

மே 03-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மே 04-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து புறப்பட்டு, கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறும். மே 04-ம் தேதி மூன்று மாவடியில் எதிர்சேவையும், மே 05-ம் தேதி சித்ரா பெளர்ணமி நாளில், மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. 

சித்திரை திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து