முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலில் காயம் காரணமாக ஐ.பி.எல்.லில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார்: மைக்கேல்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      விளையாட்டு
Michael-Hussey 2023 03 28

Source: provided

சென்னை : காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். தொடரில் பந்து வீச மாட்டார் என்று சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.

10 அணிகள் பங்கேற்பு...

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

7 ஆட்டங்கள்...

ஐ.பி.எல்.போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பந்து வீச மாட்டார்... 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் பந்து வீச மாட்டார் என பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறியுள்ளார். அவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் பேட்டராக மட்டுமே பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து