முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      தமிழகம்
Kamaraj-University 2023 04

Source: provided

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு பயிலும் மாணவிகளை சாதி ரீதியாக ஒருமையில் விமர்சிப்பதாகவும், தரக்குறைவாகப் பேசி வருவதாகவும் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பேராசிரியர் சண்முகராஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து