முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் 24-ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2023      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் 24-ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது. முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆனாலும் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் முன்பதிவு செய்து விடுகின்றனர்.

இந்த நிலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 கட்டண டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20-ந் தேதிக்குள் சுப்ரபாதம் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பொது ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் 21-ந் தேதி வெளியிடப்படும். மாதந்தோறும் 24-ந் தேதி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு 1240-வது படிக்கட்டில் சாமி தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 70,366 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 38,653 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து