முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்யா நடிக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

திங்கட்கிழமை, 22 மே 2023      சினிமா
Arya 2023-05-22

Source: provided

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் முத்தையா, ஆர்யா, சித்தி இத்னானி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஆர்யா, முத்தையா போன்ற இயக்குனர் படங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். உறவுகளின் உணர்வுகளை அழகாக படமாக்குபவர். இப்படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் ஆழமாக இருக்கும். என்னைவிட நாயகிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். என் படத்தில் ஹீரோ கத்தி பேசணும் இல்லனா கத்தில பேசணும் என்று இயக்குனர் சொன்னார். இரண்டு மாதங்கள் கோவில்பட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து