Idhayam Matrimony

சென்னையில் நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கான மருத்துவ முகாம் அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
E-V-VELU 2023-05-25

Source: provided

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பல்நோக்கு மருத்துவ முகாமை அமைச்சர்  எ.வ. வேலு துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் உடல் நலத்தினை பேணும் பொருட்டு, காவேரி மருத்துவமனையின் உதவியுடன், பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், மற்றும் உணவியல் நிபுணர்கள் மூலம் இம்முகாம் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், அலுவலர்கள் அனைவரும் வருமுன் காப்போம் என்ற கருத்தினை மனதில் கொண்டு எந்தவித தயக்கமும் இன்றி இந்த முகாமினை பயன்படுத்தி பலன் பெறுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், காவேரி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அய்யப்பன் பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி, தலைமைப் பொறியாளர்கள் மற்றும்  துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து