எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உதகை: தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்துக்கு வந்த காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு நேற்று குன்னூர், வெலிங்டன், உதகை காவல் நிலையங்களை ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் பணிக்காக 900 காவலர் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்தை கட்டுபடுத்தினர். மேலும், ஹில்காப் என்ற பெயரில் உதகையில் 5, குன்னூரில் 5, ரோந்து வாகனங்களில் போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
சுற்றுலா போலீஸார் உதகை மட்டுமின்றி மாமல்லப்புரம் மற்றும் பிற சுற்றுலா தலங்களிலும் சிறப்பாக பணியாற்றினர். வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த உதகையில் உள்ள பழைய பி1 காவல் நிலையம் அருங்காட்சியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். தற்போது தமிழ்நாடு காவல் துறையில் பணியிடங்கள் முழுமையாக நிரப்பட்டு, முழு திறன் கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டன. மேலும், 3500 காவலர்கள் தேர்வாகி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். இனி 6 மாதங்கள் பிறகுதான் மீண்டும் ஆட்கள் தேர்வு நடக்கும். தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன" என்று சைலேந்திர பாபு கூறினார். ஆய்வின்போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.பிரபாகர், கூடுதல் எஸ்.பி. மணி, உதகை நகர டிஎஸ்பி பி.யசோதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


