முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு விஷ சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை தொடக்கம்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
CBCID

Source: provided

செங்கல்பட்டு: விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவரிடம் நேற்று ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்ததில் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் சின்னதம்பியின் மனைவி அஞ்சலை உள்ளிட்ட பலர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த நிலையில விஷ சாராயம் தொடர்பாக விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் நேற்று காலை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரித்தார். இதைத்தொடர்ந்து பெருங்கரணை கிராமத்தில் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து