முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      உலகம்
China 2023-05-26

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாதவாக்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதலே, ஒமைக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 4 கோடி பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த புதிய வகை கொரோனா வாரத்திற்கு அதிகபட்சம் 6.5 கோடி பேரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஏற்பட்ட கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் அந்நாட்டு சுகாதார துறை ஸ்தம்பித்தது. 

புதிய XBB திரிபு ஒமிக்ரான் BA.2.75 மற்றும் BJ.1 ஆகியவற்றின் ஹைப்ரிட் வேரியண்ட் ஆகும். இது BA.2.75 வேரியண்டை விட அதிவேகமாக பரவுவதோடு, நோய் எதிர்ப்பு திறனை வீரியம் கொண்டு அழிக்கும் திறன் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலம் XBB திரிபை கண்டறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். 

புதிய திரிபு வேகமாக செயல்பட்டு ஒருவருக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கொரோனா தொற்றின் புதிய திரிபு தேசத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள சீனா தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து