முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

Source: provided

சென்னை :  ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 

திருச்சியில் சித்த மருத்துவத்திற்கென எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் கோரியுள்ளோம். சித்த மருத்துவத்தில் காலிப் பணியிடங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். மான் கொம்புகளை கொண்டு உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும். தானாக உதிர்ந்து விழும் மானின் கொம்புகளை இம்ப்காப்ஸ்க்கு வழங்க மத்திய அரசிடம் கோரப்படும் என்று தெரிவித்தார்.  

தொடர்ந்து ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், 

திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணிபுரிந்த மருத்துவருக்கு மிரட்டல் என புகார் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கையை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில், குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். சிதம்பரம் விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு செய்தது. கவர்னர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுகிறது. 

தேசிய ஆணையம், மருத்துவர்கள் கூறியதை மாற்றிக் கூறியுள்ளது. மருத்துவர்கள் விசாரணையில் எவ்வித தவறும் நடைபெறவில்லை என கூறப்பட்டது. விசாரணை முடிந்து வெளியே வந்த பின் கவர்னருக்கு ஆதரவாக மாறுபட்ட கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் செயல்படுவது ஆணையத்திற்கு செய்யும் அநீதி. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து