முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் : அன்புமணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      தமிழகம்
Anbumani 2023-04-20

Source: provided

சென்னை : புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதியே திறந்து வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், பல கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

டெல்லியில் நாளை 28-ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து