முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச்சாராய விவகாரத்தில் டி.ஜி.பி.யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை - அவருடைய கை கட்டப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      தமிழகம்
Sellur-Raju 2023-05-26

Source: provided

மதுரை : கள்ளச்சாராய விவகாரத்தில் டி.ஜி.பி.யை சுதந்திரமாக செயல்படவிடவில்லை.அவருடைய கை கட்டப்பட்டுள்ளது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி 11-வது வார்டு அண்ணா நகர் மந்தையில் பரவை சேர்மன் கலா மீனா ராஜா தலைமையில் புதிதாக நாடக மேடை அமைக்க பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம். எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாதுரை,பா.குமார், பரவை ராஜா,  கவுன்சிலர்கள் கீதாசெந்தில், திருஞானகரசி திருப்பதி, வின்சிதர்மேந்திரா, நாகேஸ்வரி திலகர் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராய மரணம்,போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்டவை நடந்திருக்காது. சோதனைக்கு வந்த ஐ.டி அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு.க. வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்ப சுற்றுலா போல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர்., போல வித விதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தி.மு.க. ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல.

கள்ளச்சாராய விவகாரத்தில் காவல்துறை டி.ஜி.பி.யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க. பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத தி.மு.க., இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்று சொல்வது வெளிவேஷம். 

ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும்.தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து