முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நியமனம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      தமிழகம்
Sanjay-Vijayakumar 2023-05-

Source: provided

சென்னை : சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார்  கங்காபூர்வாலாவை  நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள  டி.ராஜா கடந்த 24-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மும்பை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள  கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து  ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மகராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். கடந்த 2010- ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து