முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடிவுக்கு வந்தது 'அக்னி நட்சத்திரம்': மேலும் ஒரு வாரத்திற்கு வெயில் நீடிக்க வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கட்கிழமை, 29 மே 2023      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

புதுடெல்லி : கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகலுடன் முடிவடைந்தது. எனினும் இன்னும் ஒரு வாரத்துக்கு நாட்டின் ஒரு சில பகுதிகளில் வெயில் கடுமையாகவே இருக்கும் என்று வானிலை மையம் கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோடை காலம் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த 4 மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். வழக்கமாக கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 3 அல்லது 4 தேதிகளில் தொடங்கி 27 நாள்கள் நீடிப்பது வழக்கம். நிகழாண்டில் மே 4- இல் தொடங்கிய கத்திரி வெயில் நேற்றுடன் (மே 29) நிறைவடைந்தது. இந்தக் காலத்தில் வெயில் அளவு 100 டிகிரி முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இன்னும் ஒரு வாரத்துக்கு நாட்டின் ஒரு சில பகுதிகளில் வெயில் கடுமையாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் அதிகபட்சமாக வேலூரில் மே 16- இல் 107 டிகிரி, சென்னையில் மே 17-இல் 108, 18-இல் 106 டிகிரி பாரன்ஹீட் வெயிலின் அளவு பதிவானது. தமிழகம், புதுச்சேரி உள்பட14 இடங்களில் சனிக்கிழமை (மே 27) வெப்ப அளவு 100-ஐ கடந்து பதிவானது. கத்திரி வெயிலையொட்டி, பல நகரங்களில் சனிக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது. ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயில் வந்துச் சென்றது. 

மேற்கு திசை காற்று, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிறு முதல் புதன்கிழமை (மே 31) வரை 4 நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து