முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் : சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி

திங்கட்கிழமை, 29 மே 2023      இந்தியா
chandrababu-naidu 2023-05-29

Source: provided

திருப்பதி : பெண்கள் வங்கி கணக்கில் ரூ.15000 செலுத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

ஆந்திரா மாநிலம், ராஜமகேந்திரவரம், வேமகிரியில் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:- தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மகாசக்தி திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய இளம்பெண்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 டெபாசிட் செய்யப்படும்.

பெண்களுக்கு 59 வயது வரை உதவித் தொகை வழங்கப்படும். தள்ளி வந்தனம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழந்தையின் கல்விக்காகவும் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.15,000 டெபாசிட் செய்யப்படும். மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதி திட்டம் நிறைவேற்றப்படும். தீபம் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளின் துயரத்தை போக்க அன்னதாதா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

தெலுங்கு தேசம் ஆட்சியின் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலையில்லாத நபருக்கும் ரூ.3 ஆயிரம் வேலைவாய்ப்பின்மை நிவாரணமாக நிதி வழங்கப்படும். மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும். மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு 2 குழந்தைகள் என்ற விதிமுறை ரத்து செய்யப்படும்.

மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகம் தசரா பண்டிகையின் போது வெளியிடப்படும். தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்ததும் இந்த தேர்தல் அறிக்கை முழுவதும் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன். வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய வேண்டும். என்னை நம்புங்கள், நான் ஆந்திராவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 6 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து