முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் கெஜ்ரிவால்

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
Kejriwal 2023 04 14

Source: provided

சென்னை : மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசவுள்ளார். 

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்வரும்,  ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல்வர்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இதுவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்துள்ளார். 

இதேபோல், கெஜ்ரிவால் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரையும் சந்தித்தார். அப்போது, அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை இன்று மற்றும் நாளை  சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

மத்திய அரசின் அரசியல் சாசனத்துக்கு விரோதமான ஜனநாயக விரோத டெல்லி அவரச சட்டத்துக்கு எதிராக தி.மு.க.வின் ஆதரவைக் கோருவதற்காக இன்று (ஜூன் 1-ம் தேதி) சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளேன். 

ஜூன் 2-ம் தேதி ராஞ்சியில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து ஆதரவு திரட்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து