முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகள் மீட்பு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Gold

பனைக்குளம், மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகளை கடலோர காவல்படை வீரர்கள் மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பின் இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டில் இருந்து கடத்தல்காரர்கள் அதிகளவில் தங்க கட்டிகளை ராமநாதபுரத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை மன்னார் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடலோர காவல்படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட கடல் வழித்தடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது படகில் வந்த கடத்தல்காரர்கள் மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் அதிகாரிகளை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசியதாக தெரிகிறது.

இது தொடர்பாக படகில் இருந்த வேதாளையை சேர்ந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி ஏற்கனவே கடத்தி வேதாளையை சேர்ந்த ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நிபுணத்துவம் பெற்ற நீச்சல் பயிற்சி பெற்ற, வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் வீசப்பட்ட கடலில் இறங்கி தேடும் பணி நடந்தது.

நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர். ஆனால் 2 நாட்களாக எதுவும் சிக்கவில்லை. இரவு நேரங்களில் வேறு யாரேனும் அந்தப் பகுதிகளில் இறங்கி தங்க கட்டிகளை எடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர். இந்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் தங்க கட்டிகளை தேடும் பணி நடைபெற்றது. அந்தப் பகுதியில் கடல் காற்று அதிகமாக வீசியதால்சில மணி நேரம் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகளின் தகுந்த ஆலோசனையோடு வீரர்கள் தொடர்ந்து தங்க கட்டிகளை மீண்டும் தேடினர். இந்நிலையில் நேற்று மதியம் ஆழ்கடலில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சலை கடலோர காவல்படை வீரர்கள் கண்டெடுத்து மீட்டனர். மேலே கொண்டு வரப்பட்ட பார்சல் மண்டபம் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பார்சல் கட்டி உடைக்கப்பட்டது. அப்போது அதில் 10 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். தங்கத்தை மீட்ட அதிகாரிகள் அதனை கடத்தி வந்த கும்பல் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து