முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      இந்தியா
Electricity 2023-06-0

Source: provided

ஜெய்பூர்: காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஜ்மீர் மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிலையில், ராஜஸ்தான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசிய அதே நாளில், அசோக் கெலாட், நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலவச மின்சாரம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், இதன் மூலம், 100 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் குடும்பத்தினர், முதல் 100 யூனிட் மின்சாரம் முற்றிலும் இலவசம், 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு யூனிட் பயன்படுத்துகிறார்களோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால்போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து