முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் திருமண தாம்பூலத்தில் மதுபாட்டில்: மணமகன் வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது காவல்துறை

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
Puducherry 2023-06-02

புதுச்சேரி, புதுச்சேரியில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது புதுச்சேரி காவல்துறை.

புதுச்சேரியில் கடந்த 28-ந்தேதி சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மணமகன் சார்பில் வழங்கிய தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் ஒரு குவாட்டர் சரக்கு பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருமே பெற்றுச் சென்றனர். 

திருமணத்திற்கு வந்தவர்களை குஷிபடுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மது குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களின் ஆசியை நிறைவேற்றவே இதை செய்ததாக மணமக்களின் நண்பர்கள் கூறினர். 

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில், திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பையில் மதுபாட்டில் வழங்கிய மணமகன் வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து புதுச்சேரி மாநில கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து