முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்து காட்சிகள் நினைவை விட்டு அகலாது : உயிர் தப்பிய பயணிகள் அதிர்ச்சி பேட்டி

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Subrato-Pal-Deboshri 2023-0

Source: provided

புவனேஸ்வர் :  ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தின் கோர காட்சிகள் நினைவை விட்டு அகலாது என்று உயிர் தப்பிய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில், மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் மஹிசடால் நகரில் மலுபாசன் கிராமத்தில் வசித்து வரும் 3 பேர் கொண்ட ஒரு குடும்பம் உயிர் தப்பி உள்ளது. 

சுப்ரதோ பால், தேபோஸ்ரீ பால் மற்றும் அவர்களின் மகன் என 3 பேரும் சென்னை வருவதற்காக ரயிலில் பயணித்து உள்ளனர். அவர்களது மகனை சென்னையில் சிகிச்சைக்காக மருத்துவரிடம் காட்டுவதற்காக வந்துள்ளனர். அப்போது, இந்த பயங்கர விபத்து நடந்து உள்ளது. 

இது பற்றி விபத்தில் உயிர் தப்பிய சுப்ரதோ பால் கூறும் போது, 

நாங்கள் நேற்று காரக்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி, சென்னைக்கு புறப்பட்டோம். பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கடந்து செல்லும்போது, திடீரென அது குலுங்கியது. அதன்பின், பெட்டி முழுவதும் புகைமண்டலம் போன்று காட்சியளித்தது. என்னால் யாரையும் பார்க்க முடியவில்லை. அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஓடி வந்து எனக்கு உதவினர். அவர்கள் இடிபாடுகளில் இருந்து என்னை வெளியே இழுத்து, மீட்டனர். கடவுள் எனக்கு 2-வது வாழ்வை கொடுத்தது போன்று உள்ளது என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். 

இந்த ரயில் விபத்தில் உயிர் தப்பிய மற்றொரு பயணியான தேபோஸ்ரீ பால் கூறும்போது, எங்களுடைய குழந்தையை காட்டுவதற்காக நாங்கள் சென்னைக்கு போய் கொண்டு இருந்தோம். அப்போது பாலசோரில் விபத்து ஏற்பட்டது. எங்களால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. யாரையும் கண்டறிய முடியவில்லை. மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதியபடி இருந்தனர். 

எங்களது மகனையும் நாங்கள் பார்க்க முடியவில்லை. நாங்கள் எப்படி பிழைத்தோம் என்பதே எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு இது 2-வது வாழ்வு கிடைத்தது போன்றே உள்ளது. நான் வாழும் வரை, அந்த கோர காட்சிகள் ஒருபோதும் எனது நினைவை விட்டு அகலாது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து