முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்து: 30 ஆண்டுகளில் நிகழ்ந்த 3-வது மிகப்பெரிய விபத்து

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Coromandel-1 2023-06-03

Source: provided

புதுடெல்லி : நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து, கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துக்களில் மூன்றாவது மிகப் பெரிய ரயில் விபத்து ஆகும்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது.
மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் அதுல் கர்வால் கூறுகையில், "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது இது மிகவும் மோசமான விபத்தாகும். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியிருக்கிறது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன" என்றார்.
3-வது மிகப் பெரிய விபத்து:
கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-வது மிகப் பெரிய விபத்து என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை நிகழ்ந்துள்ள மிகப் பெரிய ரயில் விபத்துகள் வருமாறு.,
1) அக்டோபர் 18, 2018: பஞ்சாப்பின் அமிர்தசரஸில் தசரா பார்வையாளர்களின் மீது ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2) நவம்பர் 20, 2016: உத்தரப் பிரதேசத்தின் கான்பூரிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர் - ராஜேந்திரா நகர் விரைவு ரயிலில் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர், 250-க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்.
3) மே 28, 2010: ஹவுரா - லோகமானிய திலக் டெர்மினஸ் ஞானேஸ்வரி அதி விரைவு வண்டி, மகாராஷ்டிராவின் ஹமாசுலி மற்றும் சர்திகா இடையே சென்றபோது எதிரே வந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 140 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
4) அக்டோபர் 29, 2005: ஆந்திரப் பிரதேச மாநிலம், வாலிகொண்டா நகரத்தில் திடீர் வெல்லத்தால் சிறிய ரயில்வே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால், டெல்டா பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 144 உயிரிழந்தனர், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
5) செப்டம்பர் 9, 2002: பிஹாரின் கயா மற்றும் டெஹாரி ஆன் சோன் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்றுப்பாலத்தில், ஹவுரா ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு இரண்டு பெட்டிகள் ஆற்றினுள் விழுந்ததில் 140 பேர் உயிரிழந்தனர்.
6) ஆகஸ்ட் 2, 1999: மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் கைசால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் விரைவு ரயில் மீது பிரம்மபுத்ரா மெயில் வந்து மோதிய விபத்தில் குறைந்தது 285 பேர் உயிரிழந்தனர். சுமார் 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
7) நவம்பர் 26, 1998: பஞ்சாப் மாநிலம் கன்னாவில், ஃப்ரன்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம்புரண்ட மூன்று பெட்டிகளின் மீது ஜம்மு தாவி-சீல்டா விரைவுரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் உயிரிழந்தனர்.
8) ஆகஸ்ட் 5, 1997: ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் பிரம்மாபுர் இடையே இரண்டு கோரமண்டல் விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ரயில் ஹவுராவில் இருந்தும், மற்றொன்று சென்னையில் இருந்தும் வந்து கொண்டிருந்தன. இரண்டு ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 15, 1999-ல் துசி கிராஸிங் அருகே நாகவல்லி ஆற்றில் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்தனர்.
9) ஆகஸ்ட் 20, 1995: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் அருகே, நின்று கொண்டிருந்த காளிந்தி விரைவு ரயில் மீது புருஷோத்தம் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலன பயணிகளில் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
10) ஜூலை 8, 1988: கேரளா மாநிலம், கொல்லம் அருகில் உள்ள அஷ்டமுடி ஏரியில் உள்ள பெருமான் பாலத்தில் சென்ற விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 106 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ரயிலின் 10 பெட்டிகள் நீரில் மூழ்கின.
11) ஜூன் 6, 1981: பீகார் மாநிலத்தில் பாக்மதி ஆற்றுபாலத்தை கடக்கும் போது ரயில் ஒன்று தடம்புரண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 300 பேர் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து