முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்தில் மலையாள நடிகர் கொல்லம் சுதி பலி : திரையுலகினர் இரங்கல்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      சினிமா
Kollam-Sudhi 2023-06-05

Source: provided

கொச்சி : மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி நேற்று அதிகாலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.

நேற்று (ஜூன் 5) அதிகாலை 4.30 மணியளவில் திரிச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நடிகர் சுதி, தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நடிகர் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள், கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதி உயிழந்தார்.

2015ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரி' படத்தின் மூலம் கொல்லம் சுதி சினிமாவில் அறிமுகமானார் . 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்', 'குட்டநாடன் மர்ப்பப்பா', 'கேசு ஈ வீட்டை நாடன்', 'எஸ்கேப்', 'ஸ்வர்கத்திலே காட்டுறும்பு' ‘கொல்லம்’ உள்ளிட்ட பல படங்களில் சுதி நடித்துள்ளார். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் தனது மிமிக்ரி திறமை மூலமாக சுதி பிரபலமானார். கொல்லம் சுதியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து